என்னவரின் எண்ணங்கள்…

என் கணவர் சங்கர் பழனிசாமி முகநூலில் பதிவு  செய்த எண்ணங்கள்/கருத்துகள் இவை… 

“எந்த ஒரு இனமும்/ஜாதியும் தங்களை அடையாள படுத்திக்கொள்ள தனக்கென ஒரு கட்சியையும்/இயக்கத்தையும் ஆரம்பிக்கும் பொழுது ஆரம்பம் ஆகிறது அதன் அழிவு. ஒரு சில இளைஞர்கள் மத்தியில் இருந்த பற்று வெறியாக மாற்றம் பெறுகிறது. குடும்ப பிரச்சனைகள் அரசியலாக்கப் படுகிறது. மொத்ததில், நிம்மதி கேள்விக்குறியாகிறது!”

“பாடல் வரிகளுக்கு இனிமை சேர்த்து வந்த இசைப்புயல் இசை பாடல் வரிகளை கொல்கிறது  -மென்டல் மனதில்”

“தாம் சொல்வதே சரி என்று அவனும் அவளும் போட்டி போட்டு இருவரும் தோற்றுப்போய் விட்டுகொடுக்கையில் நெஞ்சை நிமிர்த்தி வெற்றிபெறுகிறது காதல்.”

“குழந்தையின் மழலையை புரிந்து கொள்ள தாயால் மட்டுமல்ல தந்தையாலும் முடியும் …”

“தான் ஈன்ற கடைசி மகனையும் போருக்கு அனுப்ப தயாராக இருக்கும் வீரத் தாய்கள் உலகம் முழுவதும் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு அமைதி பூங்காவாக இருந்திருக்குமோ !!!”

“சாதி மதம் பேதம் இல்லாத இடங்களின் வரிசையில் மதுபான கடையும்!”

“காமம் இல்லாத காதல் போல
காதல் இல்லாத காமமும்
இருக்கவே செய்கிறது
விலைமாது என்ற பெயரில்..”

“இளமையோ.. முதுமையோ.. வயது மட்டுமே அளவுகோல் அல்ல!”

“பேய் பிடிப்பது, பேய் ஓட்டுவது எல்லாம் இல்லாதவர்களிடமும், நடுத்தர மக்களிடமும் மட்டுமே நடக்கிறதே! இதுவும் அரசியலா!?!?!?”

“ஆத்திகரனாலும், நாத்திகரனாலும் அடுத்தவரின் உணர்வை மதிப்பதும், அப்படி மதிப்பவரை சாதகமாக பயன்படுத்தி அவரின் மீதே அந்த உணர்வை திணிக்காமல் இருப்பதுமே உண்மையான பகுத்தறிவாக இருக்க முடியும்! –பகுத்தறிவாளன்.”

“வாழ்க்கை! வாழ்க்கை, திட்டமிடாமல் சுவாரசியமாக வாழ்வதற்காக அல்லது திட்டமிட்டு பொருள் ஈட்டுவதற்காக என்று ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து பயணிப்பவர்கள் சற்றுத் தெளிவாகவே இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் இந்த இரண்டிலும் லயிக்க முடியாமல், இரண்டுக்கும் இடையில் தாமாகவே ஒரு புதியப் பாதையை அமைத்து தெளிவாக வாழ்வதாக நினைத்து குழப்பத்துடனே பயணிக்கிறார்கள்! –சுவாரசியமாக வாழ ஆசைப்பட்டு, திட்டமிட்டு குழப்பத்துடன் பயணிக்கும் சாமானியன்..”

“90-களில் பார்த்த கிராமங்களும், அந்த மக்களின் பழகுமுறையும் இன்று ஏனோ எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை!”

“சுடுகாட்டுக்கு எதுக்கு ஜாதி??? ஒரு கிராமத்தில் 2 ஜாதிகளுக்கு தனி தனியே சுடுகாடுகள் இருக்கின்றன. பஞ்சம் பிழைக்க பரதேசியாக வேற்று ஜாதியில் இருந்து ஒருவன் தன் குடும்பத்தோடு வருகிறான் எனில், அவன் அந்த 2 ஜாதிகளுக்கு உயிர் உள்ளவரை சேவை செய்யலாம். ஆனால் அவனது குழந்தை இறந்தால் கூட 6 X 2 இடம் கிடைப்பதில்லை சுடுகாட்டில்! சுடுகாட்டில் கூட இடம் கிடைக்காத இந்த கேடுகெட்ட சமூகத்தில் நாம் எல்லாம் பெருமையாய் சொல்லிக்கொள்வது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் அனைவருக்கும் சொந்தமானது.”

“பணம் அற்றவரின் வாழ்வை, அன்பை, காதலை படம் எடுப்பதற்கும் பெரும்பணம் தேவைப்படுகிறது – தங்கமீன்கள்”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s